உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசேகரம், காவுகுளம் நாகராஜா கோவிலில் கும்பாபிஷேகம்

குலசேகரம், காவுகுளம் நாகராஜா கோவிலில் கும்பாபிஷேகம்

குலசேகரம்; குலசேகரம் வெண்டலிகோடு காவுகுளம் நாகராஜா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலையில் மஹா கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து கோவில் கமிட்டி தலைவர் மனோகரன் நாயர் தலைமையில் கோவில் தந்திரி சதானந்தன் போற்றி, கோவில் மேல் சாந்தி சுப்ரமணியன் போற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பாபிஷேகத்தில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஹிந்து கோவில் கூட்டமைப்பு தலைவர் விவோகானந்தன், ஹிந்து கோவில் கூட்டமைப்பு திருவட்டார் ஒன்றிய தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மாவட்ட ஆலோசகர் மிசா சோமன், ஹிந்து கோவில் கூட்டமைப்பு திருவட்டார் ஒன்றிய தலைவர் தர்மராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், பொன்மனை பஞ்.,துணை தலைவி அருள்மொழி, கவுன்சிலர் கிருஷ்ணா குமார் மற்றும் காவுகுளம் நாக ராஜாகோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !