ஆறுமுகநேரி சித்திவிநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா
ADDED :543 days ago
ஆறுமுகநேரி; ஆறுமுகநேரி, தெப்பக்குளம் சித்திவிநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, மஹாகணபதி ஹோமம், பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து விமான அபிஷேகம், விநாயகருக்கு 16 வகையான திரவியங்களால் மகாஅபிஷேகம், வருஷாபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கார, தீபாராதனை நடந்தது. மாலை சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் பன்னிரு திருமுறை மகளிர் வழிபாட்டு குழுவினர்விநாயகர் அகவல் பஜனை பாடல்கள் பாடினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.