வானமாமலை பெருமாள் கோவிலில் தங்க சப்பரம் வீதி உலா
ADDED :639 days ago
நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடந்து வருகிறது. 7ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை வானமாமலை பெருமாள், ஸ்ரீவர மங்கைத் தாயார் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வைபவம் நடந்தது. தொடர்ந்து வான மலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார் கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெரு, உள்மாடவீதியில் வீதியுலா வைபவம் நடந்தது. இதில், வானமா மலை மடத்தின் 31வது மடாதிபதியான மதுர கவி வானமாமலை ராமானுஜ ஜீயர் மற்றும் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர். வரும் 21 தேதி தேரோட்டம் நடக்கிறது.