சித்திரை ஏகாதசி; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
ADDED :886 days ago
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு கரி வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.