மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
507 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
507 days ago
விளாத்திகுளம்; விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8ம் நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தியில் எழுந்தருளல், சுவாமி அம்பாள் அபிஷேகம் ஆகியவை நடந்தது. முன்னதாக மாலை ஆறு மணிக்கு விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் சார்பில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு எட்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு, யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையில் யூனியன் அலுவலகத்தில் இருந்து அம்பாளுக்கு பட்டு மற்றும் பூஜை பொருள்கள் ஆகியவை மேளங்கள் முழங்க மதுரை சாலை, காய்கறி மார்க்கெட் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்பு அங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டது. பி.டி.ஓ தங்கவேல், யூனியன் துணைத்தலைவர் சுப்புலட்சுமி, யூனியன் அலுவலக மேலாளர் லட்சுமி பிரியா, ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
507 days ago
507 days ago