சித்ரா பௌர்ணமி விழா; சித்தர் முத்துவடுக நாதருக்கு பாலாபிஷேகம்
ADDED :610 days ago
சிவகங்கை ; சிங்கம்புணரி சித்தர் முத்துவடுக நாதருக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று பாலாபிஷேகம் செய்தனர்.
200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் குடும்பத்தில் பிறந்து, இடம் பெயர்ந்து சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து பல்வேறு சித்துக்கள் மூலம் நன்மைகள் புரிந்தவர் சித்தர் முத்துவடுகநாதர். இவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாபிஷேகத் திருவிழா இன்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் காலை 9:30 மணிக்கு சீரணி அரங்கம் அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர்.