மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
504 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
504 days ago
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில், சாரங்கா சாரங்கா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது. இந்தத் தேரின் நான்கு சக்கரங்கள் ஒன்பது அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள நான்கு குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்ததாக தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சாரங்கபாணி தெற்கு வீதியில் வரும் போது திடீரென்று சாலையில் தேரின் இடது புற முன் சக்கரம் சுமார் 5 அடி பள்ளத்தில் சிக்கியது. உடனடியாக தேரோட்டம் பணியாளர்கள் மேலும் தேர் கீழே இறங்காமல் இருப்பதற்கு ஜாக்கிகளை கொண்டும் கிரேன் வரவழைக்கப்பட்டு தேரின் சக்கரத்தை மேலே துாக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்– சாண்ட் கொண்டு பள்ளத்தில் நிரம்பி தேரினை நகர்ந்தும் பணி நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 மணி நேரமாக தேரோட்டம் தடைப்பட்டு உள்ளது.
504 days ago
504 days ago