உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சித்ரா பவுர்ணமி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். கடும் கூட்டத்தால் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !