சித்திரை வசந்த உற்சவம்; அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ நிறைவையொட்டி, அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து, 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடக்கும். அதன்படி சித்திரை வசந்த உற்சவம், பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விிழாவில் இன்று காலை, 10:00 மணிக்கு அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரியில் நிகழ்ச்சி அய்யங்குளக்கரையில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு, கோபால விநாயகர் கோவிலில் மண்டபகப்படியும் நடக்கும். நள்ளிரவு, 12:00 மணியளவில் கோவில், 3ம் பிரகாரத்தில், தங்க கொடிமரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.