எழுமலையில் சித்திரை திருவிழா; பெருமாள், முருகன் எதிர்சேவை
ADDED :525 days ago
எழுமலை; எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் ஆலய சித்திரை திருவிழாவில் திருவேங்கடப்பெருமாள் சீர்வழங்கும் நிகழ்ச்சியும், எதிர்சேவையும் நடந்தது. நிகழ்ச்சிக்காக மாதாந்திர சுப்பிரமணியர் கோயிலில் இருந்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடனும், பெருமாள் கோயிலில் இருந்து திருவேங்கடபெருமாளும் புறப்பாடாகி எழுமலை ராஜகணபதி கோயில் அருகில் எழுந்தருளினர். இன்று காலை பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சிக்குப்பின் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. எழுமலை பெரிய கண்மாய் பகுதிக்கு ஊர்வலமாக வந்து அங்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.