திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ தீர்த்தவாரி
ADDED :543 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை உற்சவர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் 9ம் நாளான நேற்று, காலை ஆள்மேல் பல்லக்கு மற்றும் ஹிருதாபநாசினி திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்வசம் நடந்தது. இதில், உற்சவர் வீரராகவர் கோவில் குளத்தில் புனித நீராடினார். விழாவின் பத்தாம் நாளான இன்று திருமஞ்சனம், இரவு கண்ணாடி பல்லக்கு நடைபெற உள்ளது.