கோவிந்தா கோஷத்துடன் பாலமலை அரங்கநாதர் கோவில் தேரோட்டம்
ADDED :639 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி தேர்திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை ஒட்டி யானை வாகன உற்சவமும், அதைத் தொடர்ந்து சிறிய தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து அரங்கநாதர் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் உற்சவ நிகழ்ச்சி துவங்கியது. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து, இழுத்து கோயிலை சுற்றி வந்தனர். இன்று சேஷ வாகன உற்சவமும், தெற்போற்சவம் நடக்கிறது. நாளை சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது. சனிக்கிழமை பகல், 12:00 மணிக்கு மறு பூஜை நடக்கிறது.