உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தனூர் மகா சாத்தையனார் கோயிலில் வடம் எடுத்தல் விழா

சாத்தனூர் மகா சாத்தையனார் கோயிலில் வடம் எடுத்தல் விழா

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் எருதுகட்டு விழாவை முன்னிட்டு, வடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து வடத்தை பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று, ஊரின் மையப்பகுதியில் உள்ள அரச மரத்தில் வைத்து வழிபாடு செய்தனர். அரச மரத்தில் வைத்த வடத்தை கூடியிருந்த பக்தர்கள் தொட்டு வழிபாடு செய்தனர். முக்கிய விழாவான எருதுகட்டு விழா நாளை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினால் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !