உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் கொடியேற்றம் மாலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. தினமும் சுவாமிகள் சிறப்பு அலங்காரங்களில் சிறப்பு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஐந்தாம் நாள் ஸ்ரீ கோதண்டராமர் சீதை திருமணம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். ஒன்பதாம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கோதண்டராமர் சீதை லட்சுமணன் திருத்தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !