/
கோயில்கள் செய்திகள் / பாலக்கரை பகவத் விநாயகர் கோவிலுக்கு சொந்த மண்டபம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
பாலக்கரை பகவத் விநாயகர் கோவிலுக்கு சொந்த மண்டபம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
ADDED :600 days ago
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பழைய பாலக்கரையில் உள்ள, பகவத் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பகவத் படித்துறை மண்டபம் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது. இந்த மண்டபத்திற்குள் எட்டு மாதமாக, சிவானந்தம் என்பவர் ஆக்கிரமித்து, மண்டபத்தின் மின்சாரத்தை, உரிய அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக, கோவில் நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இது குறித்து, அறநிலையத்துறை அலுவலர்கள் விசாரித்த போது, நீதிமன்றத்தில் சிவானந்தம்
வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, மண்டபத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகளை மீட்டு, மின்சாரத்தை ஊழியர்கள் நேற்று துண்டித்தனர். அந்த பகுதியை பூட்டி சீல் வைத்தனர்.