திரிபுரசுந்தரி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் வடக்கூரில் உள்ள மங்கள விநாயகர், திரிபுரசுந்தரி பத்ரகாளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஏப்.24ல் அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி துவங்கப்பட்டு நவகிரக ஹோமம், தீப லெட்சுமி பூஜை, மிருத்சங்கிரஹனம், பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷனம்,கும்பலங்காரம், முதற்கால, இரண்டாம் கால யாக பூஜைகள்,பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மூன்றாம், நான்காம் கால யாக பூஜைகள் தீபாராதனை கடம் புறப்பாட்டுக்கு பின்பு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மூலவரான திரிபுரசுந்தரி பத்திரகாளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. பொது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகுளத்தூர் க்ஷத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர். விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.