பழநி சட்டி சுவாமிகள் ஜீவசமாதியில் குரு பூஜை விழா
ADDED :531 days ago
பழநி; பழநி சட்டி சுவாமிகள் ஜீவசமாதிகள் குரு பூஜை விழா நடைபெற்றது. பழநி அடிவாரம், கிரிவீதி பகுதியில் உள்ள சட்டி சுவாமிகள் ஜீவசமாதி மடம் செயல்பட்டு வருகிறது. மடத்தில் 98 ம் ஆண்டு சட்டி சுவாமிகள் குருபூஜை நடந்தது. முதல் கால யாக பூஜைகள், ஏப்.25ல் அதிகாலை 5:00 மணி நடந்தது. அன்று மாலை திருவுருவ கிரிவீதி உலா நடைபெற்றது. ஏப்.26ல் இரண்டாம் கால யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகம் அலங்காரம்,அன்னதானம் நடைபெற்றது. நிர்வாகிகள் ரவி சுவாமிகள் சின்னச்சாமி மற்றும் சாதுக்கள் பலர் கலந்து கொண்டனர்.