உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடை விடுமுறை : ராமேஸ்வரம் கோயில் பக்தர்கள் குவிந்தனர்

கோடை விடுமுறை : ராமேஸ்வரம் கோயில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம்; கோடை விடுமுறை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்ததும், மக்கள் குழந்தைகளுடன் புனிதம், சுற்றுலாத் தலங்களுக்கு செல்கின்றனர். அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன் பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் கோயில் சன்னதி தெரு, மேலவாசல், திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !