உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது.

முதல் நாள் விழாவில் திருமஞ்சனக்குடம் அழைத்துவரப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 2ம் நாள் விழாவில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகளுடன் பக்தர்கள் பொங்கலிட்டு, பால்குடம், காவடி, தீச்சட்டி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. 3ம் நாள் விழாவில் கோயில் வளாகத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வீரக்குமார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !