உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி பகுதி கோவில்களில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

செஞ்சி பகுதி கோவில்களில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

செஞ்சி; குருபகவான் நேற்று மாலை 5.30 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார். இதை முன்னிட்டு நேற்று செஞ்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து பரிகார ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாரம்பரேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பரிகார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !