மாமல்லை ஸ்தலசயனர் விடையாற்றி பூப்பல்லக்கு உலா கோலாகலம்
ADDED :608 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த ஏப்., 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி, தினசரி காலை, இரவு, வாகன சேவையாற்றி, வீதியுலா சென்றார். ஏப்., 21ம் தேதி, கருட வாகன சேவையாற்றி, 23ம் தேதி திருத்தேரில் உலா சென்றார். கடந்த 26ம் தேதி திருமஞ்சனம், த்வாதச ஆராதனம், புஷ்பயாகம், திருவாய்மொழி சாற்றுமறை, சுவாமி வீதியுலா சென்று, பிரம்மோற்சவம் நிறைவுபெற்றது. தொடர்ந்து, ஏப்., 27ம் தேதி முதல், மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம் நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, ஸ்தலசயன பெருமாள், தேவியருடன் அலங்கார பூப்பல்லக்கில் உலா சென்றார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.