தங்கப்பனூரில் மகா கும்பாபிஷேக விழா
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூரில் மன்னார் சாமி, பச்சையம்மன், முனீஸ்வரர், பால விநாயகர், பாலமுருகன், நவகிரகம், கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு கடந்த மாதம் 29ம் தேதி காலை 5 மணிக்கு மேல் மங்கல இசையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி பிரவேச பலி மற்றும் புற்றுமான் எடுத்து வருதல் பலிகை பூஜைகள் இதனைத் தொடர்ந்து தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்ச்சி நடைபெற்றன. கடந்த 1ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் முதற் கால யாக பூஜையும் இரண்டாம் தேதி இரண்டாம் காலயாக பூஜையும் மற்றும் மூன்றாம் காலை யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு 10 மணிக்கு பால விநாயகர், பாலமுருகன், பச்சையம்மன், மன்னர் சாமி,7-முனீஸ்வரர்கள், நவகிரகங்கள் கன்னிமார், பாவாடை ராயர், மகா மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இப்பகுதி சுட்டு உள்ள கிராமத்தில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.