உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்

பழநி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்

பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாளையம் விநாயகர் கோவில், பால சமுத்திரம் அய்யம்பள்ளி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பால சமுத்திரம் அய்யம்பள்ளி விநாயகர் கோயிலில் புணரமைப்பு பணிகள் நிறைவு பெற்று மே.2ல் முதற்கால வேள்வி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. இரண்டாம் கேள்வி இன்று மே.3 ல் அதிகாலை துவங்கியது. யாக பூஜை வைக்கப்பட்ட புனித நீர் எடுத்துவரப்பட்டு காலை 8:40 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழநி, பாளையம் விநாயகர் கோயிலில் புணரமைப்பு பணிகள் நிறைவு பெற்று மே.2ல் முதற்கால வேள்வி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. இரண்டாம் கேள்வி இன்று மே.3 ல் அதிகாலை துவங்கியது. யாக பூஜை வைக்கப்பட்ட புனித நீர் எடுத்துவரப்பட்டு காலை 7:05 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகங்களை பழநி கோயில் பண்டிதர் அமிர்தலிங்க குருக்கள், அர்ச்சக ஸ்தானிகர் செல்வ சுப்பிரமணியம் குருக்கள் செய்தனர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி, கோயில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கந்த விலாஸ் பாஸ்கரன், சாய் மருத்துவமனை சுப்புராஜ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !