தினமலர் செய்தி எதிரொலி; திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தூய்மைப் பணி
ADDED :624 days ago
திருப்பரங்குன்றம்; தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை தண்ணீரில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை தண்ணீரில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தன. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக சரவணப் பொய்கையில் தண்ணீரில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டது.