ஹலசூர் சோமேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா; கண்ணை கவர்ந்த பூப்பல்லக்குகள்
ADDED :635 days ago
ஹலசூரில் சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ திருவிழா நடக்கும். அப்போது இக்கோவிலின் சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்தும் பூப்பல்லக்குகள் பவனி வரும். நடப்பபாண்டும்,
சோமேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் ஏப்., 14ம் தேதி துவங்கியது. வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. கர்நாடக அரசின் ஹிந்து அறநிலைய துறை மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் சார்பில் நேற்று முன்தினம் காமாட்சி அம்மன் பல்லக்கு உற்சவம் நடந்தது. கோவிலின் காமாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து உற்சவ மூர்த்தி, மயில் பல்லக்கில் பவனி வந்தார். இதை தொடர்ந்து, ஹலசூரு பகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட தேர்கள் பல்வேறு தெருக்கள் வழியாக பவனி வந்தன. சுவாமியை தரிசிக்க பல பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.