காளஹஸ்தி சிவன் கோவில் நித்ய அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
ADDED :561 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடைபெறும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பங்காரம்மன் காலனியைச் தயாசாகர் ரெட்டி-மதுமதி ரெட்டி தம்பதியினர் ரூபாய் 1,11001/- ஒரு லட்சத்து பதினோராயிரத்து ஒரு ரூபாய் நன்கொடையாக கோயில் அதிகாரிகளிடம் வழங்கினார்கள் முன்னதாக இவர்களுக்கு கோயிலில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஆலயம் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் கோயில் அதிகாரிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் சதீஷ் மல்லி நாகபூஷணம் ரவி கோபால் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.