காளியம்மன் கோயிலில் பெண்கள் விளக்கு பூஜை
ADDED :560 days ago
தேவகோட்டை; தேவகோட்டை அண்ணாநகரில் உள்ள கல்லாம்பிரம்பு காளியம்மன் முனீஸ்வரர் கோயில் சித்திரை மாத உற்சவ விழா கடந்த வாரம் கணபதி ஹோமம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் காளியம்மன் , முனீஸ்வரர், மற்றும் பரிவார ஒ ,சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயில் சந்நிதி அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் வெயில் தணிந்து, நல்ல மழை வளம் செழிக்க, வாழ்வு செழிக்கவும் விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். இன்று இரவு பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்கின்றனர்.