கார்த்திகை வழிபாடு; கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :880 days ago
கோவை; ஆர். எஸ். புரம் உழவர் சந்தை எதிரே அமைந்துள்ள விநாயகர் கோயிலில் சித்திரை கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் வள்ளி தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.