சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :552 days ago
கோவை; காட்டூர் அனுப்பர்பாளையம் ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் 45ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்.