உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி மகா மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி; அவிநாசி கைகாட்டிப்புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மழை பெய்ய வேண்டி முளைப்பாரி எடுத்து அம்மன் பாடல் பாடி அழைத்து கும்மி அடித்தனர்.அவிநாசி, கைகாட்டி புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு மாலையில், கோவில் வளாகத்தில் 50ம் மேற்பட்ட பெண்கள் வறட்சி நீங்கி, பசுமை ஓங்க ஜீவராசிகள் தாகம் தணிக்க மழை பெய்ய வேண்டி அம்மன் பாடலை பாடி அழைத்து கும்மியடித்தனர். அதனைத் தொடர்ந்து, மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, பொங்கல் வைத்தல், கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதல், 5ம் தேதி கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. அதன் பின்னர் 7ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், கரகம் எடுத்தல்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை மஞ்சள் நீராட்டுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வழிபாடு மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !