உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை வேத பாடசாலையில் சங்கர ஜெயந்தி விழா

கோவை வேத பாடசாலையில் சங்கர ஜெயந்தி விழா

கோவை: கோவை, ஆர் எஸ் புரம் வேதசாஸ்திர பாடசாலையில் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை சங்கரர் வீதியுலா புறப்பாடு நடந்தது. பாடசாலை மாணவர்கள்உபநிஷத் பாராயணங்கள்,கணபதி ஹோமம், வசோர்தாரா ஹோமம், மஹா பூர்ணாஹூதி, சதுர் வேத பாராயணம், பிக்ஷா வந்தனம், தோடகாஷ்டகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் தன்னார்வலர்களுக்கு வேத பாடசாலை தலைவர் ரவி ஷாம் விருதுகளை வழங்கினார். விழாவில் வளம் ரமண தீட்சிதர், கோவிந்த பிரகாச தீட்சிதர், வேணுகோபாலசாமி கைங்கரியம் டிரஸ்ட் பொறியாளர் ஸ்ரீராம், ஜீவ சாந்தி டிரஸ்ட் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !