அட்சய திருதியை; அயோத்தி சரயு நதியில் புனித நீராடி பக்தர்கள் தரிசனம்
ADDED :560 days ago
உத்தரபிரதேசம்: அயோத்தியில் அட்சய திருதியையை முன்னிட்டு சரயு நதியில் புனித நீராடி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
புண்ணிய பூமியாக போற்றப்படும் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் அயோத்தி ராமரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அட்சய திருதியை தினமான இன்று சரயு நதியில் புனித நீராடி, ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.