உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவிலில் அரசு - வேம்பு அம்மன் திருக்கல்யாணம்

சக்தி விநாயகர் கோவிலில் அரசு - வேம்பு அம்மன் திருக்கல்யாணம்

தியாகதுருகம்; தியாகதுருகத்தில் அரசு மற்றும் வேம்பு அம்மனுக்கு திருக்கல்யாண விழா நடந்தது.

தியாகதுருகத்தில் உள்ள புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே சக்தி விநாயகர் கோவிலில் அரசு மற்றும் வேம்பு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக கணபதி பூஜை, திருவிளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் யாகசாலை அமைத்து சிவ தொண்டர்கள் முற்றோதல் செய்தனர். அது தொடர்ந்து அரசு மற்றும் வேம்ப அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !