உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தரிசனம்; ஆகஸ்ட் மாத ஆர்ஜிதசேவா டிக்கெட் மே 18ல் வெளியீடு

திருப்பதி தரிசனம்; ஆகஸ்ட் மாத ஆர்ஜிதசேவா டிக்கெட் மே 18ல் வெளியீடு

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான ஆகஸ்ட் கோட்டாவை மே 18 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்.

இந்த சேவை டிக்கெட்டுகளை பெற ஆன்லைன் பதிவு மே 20ம் தேதி காலை 10 மணி வரை செய்யலாம். இந்த டிக்கெட்டுகளைப் பெறுபவர்கள் மே 20 முதல் 22 வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் மட்டுமே டிக்கெட் ஒதுக்கப்படும்.  ஸ்ரீவாரி கோவிலில் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை நடைபெறும் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ரதிபாலங்கர சேவாடிக்கெட்டுகள் மற்றும் வருடாந்திர பவித்ரோத்ஸவலா சேவை டிக்கெட்டுகள் மே 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மெய்நிகர் சேவைகள் ஒதுக்கீடு மே 21 அன்று வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கபிரதக்ஷிணம் டோக்கன்கள் ஒதுக்கீட்டை மே 23 அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்கள் திருமலை ஸ்ரீவரை தரிசிக்க ஏதுவாக ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீட்டை மே 23 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மே 24 அன்று வெளியிடப்படும்.

திருமலை மற்றும் திருப்பதியில் ஆகஸ்ட் அறை ஒதுக்கீடு மே 24 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாரி சேவா கோட்டா மே 27ம் தேதி வெளியாகிறது. திருமலை - திருப்பதி ஸ்ரீவாரி சேவா கோட்டா மே 27 அன்று காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.  https://ttdevasthanams.ap.gov.in இணையதளம் மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜிதசேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !