காஞ்சிவனம் சுவாமி மந்தை கோயில் கும்பாபிஷேகம்
ADDED :559 days ago
மேலுார்; சின்னரசன்பட்டி காஞ்சிவனம் சுவாமி மந்தை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மே 9ல் யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டாம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடத்தினார். பிறகு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னரசன்பட்டி, தெற்குப்பட்டி மற்றும் மேலூரை சுற்றியுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.