உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

காளஹஸ்தி;  சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று 10ம் தேதி எண்ணப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கீட்டின் மூலம் கடந்த 21 நாட்களில் ஒரு கோடியே பதினான்கு லட்சத்து அறுபத்து மூன்றாயிரத்து 904 ரூபாய் 1,14,63,904ரூபாய், தங்கம் :73.  கிராம், வெள்ளி :1 கிலோ 320கிராம், நித்ய அன்னதான   உண்டியல் மூலம்25,019ரூ கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணம் யு.எஸ்.ஏ - 591. டாலர்கள்,  U.A.E - 25. திராம்ஸ், ஆஸ்திரேலியா - 40.டாலர்கள், யூரோ - 25. யூரோ, சவுதி - 5. ரியால், வருமானமாக வந்ததாக கோவில் செயல் அலுவலர் ஏ. வெங்கடேசு கூறினார். இந்த  உண்டியல் எண்ணும் பணியில் கோயில் அதிகாரிகள்- ரவீந்திரபாபு, வித்யாசாகர் ரெட்டி, ஹரி மாதவ் ரெட்டி, தனஞ்சயா,  கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, மல்லிகார்ஜுனா, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் யூனியன் வங்கி காணிப்பாக்கம் கிளை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !