வளர்பிறை சதுர்த்தி; பிரசன்ன மகாகணபதி கோவிலில் மூலவருக்கு அபிஷேகம்
ADDED :878 days ago
கோவை; கோவை ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் சித்திரை வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் மகாகணபதிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.