திருவாவடுதுறை ஆதீன அன்னதான விநாயகருக்கு வருஷாபிஷேகம்
ADDED :558 days ago
தேவகோட்டை; தேவகோட்டை அருகே திருப்பாக்கோட்டையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அன்னதான விநாயகர் கோவில் பல ஆண்டுகளாக உள்ளது. இக்கோவிலில் அன்னதானம் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு முடிந்ததை தொடர்ந்து நேற்று அன்னதான விநாயகருக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜை, லட்சுமி பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விநாயகர் தரிசனம் செய்தனர். வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூவாயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.