உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சுவாமி தரிசனம்

திருப்பதியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சுவாமி தரிசனம்

திருப்பதி: திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று (மே.,11) சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

தரிசனத்திற்கு பின் தனது எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் பிரார்த்தனையுடன் எனது நாள் தொடங்கியது, ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியின் ஆசீர்வாதம், இந்த புனித ஸ்தலத்தின் அமைதியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக சக்தியும் நம் இதயங்களை அமைதியால் நிரப்புகின்றன. நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். வெங்கடேசப் பெருமான் நம் மீது அருள் பொழிந்து செழிப்பு, ஒற்றுமை மற்றும் அமைதியை நோக்கி நம்மை வழிநடத்தட்டும். இவ்வாறு ஜேபி நட்டா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !