அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தரிசனம்
ADDED :557 days ago
அயோத்தி ; அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறக்கப்பட்ட நாள் முதல் ராமரை லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அட்சய திருதியை தினமான நேற்று ஏராளளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று பாரதத்தின் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது குடும்பத்தினருடன் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. நேற்று அக்ஷய திருதியை முன்னிட்டு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காருக்கு மாம்பழம் காணிக்கை அளித்து பக்தர்கள் வழிபட்டனர்.