குலசை., முத்தாரம்மன் கோயிலில் 2008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை
உடன்குடி; குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயிலில் 2008 பெண்கள் கலந்து கொண்ட, சுமங்கலி பூஜை நடந்தது. குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி காலையில் கணபதி வழிபாடு, துாயமீட்பு சடங்கு செய்தல், விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை, நிறை அவி அளித்தல், நவக்கிரக வேள்வி, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, பசு பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடந்தது. காலை 11:00 மணிக்கு 1008 கலச பூஜை, இறைவி வேள்வி, வேதம், திருமுறைகள் ஓதுதல், நண்பகல் 12:00 மணிக்கு 1008 கலச பூஜை சிறப்பு நன்னீராட்டு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பூர் திருமுருகன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மோகன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை குலசை., முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ஸ்ரீ சக்தி இந்து ஆன்மீக வழிபாடு மன்றம் ஒருங்கிணைப்பாளர் சக்தி ஜெயபால், நிர்வாகிகள் செய்திருந்தனர்.