வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :557 days ago
சென்னை; வடபழநி முருகன் கோவில் அருகில் உள்ளது ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப்பெருமாள் கோவில். அறுநுாறு வருடங்களுக்கு முந்திய இந்தப்பெருமாள் கோவிலில் நேற்று( 10ம்தேதி) வெள்ளிக்கிழமை அட்சய திருதியை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஸ்ரீ இராமானுஜர் உத்ஸவமும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கஜேந்திர வரதராஜப்பெருமாள் ஸ்ரீ பெருந்தேவிதாயார் திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.