விளாச்சேரி விட்டல் மந்திரில் வசந்தோற்ஸவம்
ADDED :521 days ago
திருநகர்; மதுரை விளாச்சேரி அக்ரஹாரம் ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திரில் வசந்த பஞ்சமி வசந்தோற்ஸவம் நடந்தது. காலையில் மூலவர்கள் ருக்மணி சமேத பாண்டுரங்க கிருஷ்ணர் முன்பு தன்வந்திரி நரசிம்ம ஹோமம் முடிந்து கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர்களுக்கு சந்தன காப்பு சாத்துப்படியாகி, சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.