உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சோமவார சங்காபிஷேகம்

பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சோமவார சங்காபிஷேகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. 


பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, 1008 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. அபிஷேக நீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகள் சிவலிங்க வடிவில் வைக்கப்பட்டு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே மாகாளியம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, 108 சங்காபிஷேகம் விழா நடந்தது.  விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !