உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் தங்கத்தேர் ஊர்வலம்

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் தங்கத்தேர் ஊர்வலம்

சிவகாசி; சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புனராபர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மண்டல பூஜையை முன்னிட்டு தங்க தேர் ஊர்வலம் நடந்தது. சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஏப். 26 ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிகள் தங்க தேரில் கோயில் பிரகாரத்தில் ஊர்வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !