உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

சின்ன காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் அமுதுபடி தெருவில், ஆண்டுதோறும் கங்கையம்மனுக்கு சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவுடன் துவங்கியது. நேற்று, காலை 6:00 மணிக்கு அமுதுபடி தெருவில், அலங்கார பூப்பந்தலில் கங்கை அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பிற்பகல் 1:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பும், கூழ்வார்த்தலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !