உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி வாகனத்தில் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் வீதி உலா

நந்தி வாகனத்தில் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் வீதி உலா

சென்னை ; தேனுபுரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. இங்கு பிரம்மமோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !