குமரகோட்டம் முருகன் கோயிலில் வெள்ளி தேரோட்டம்
ADDED :552 days ago
காஞ்சி; கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோயிலில், வெள்ளித்தேரில் முருகன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை xவடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளிய குமரகோட்டமும் ஒன்று. இக்கோவிலில், இன்று வெள்ளித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. வெள்ளித்தேரில் உலா வந்த முருகனை ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர்.