உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளபொம்மன்பட்டி கோயில் திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும்; ஐகோர்ட் கிளை கருத்து

வெள்ளபொம்மன்பட்டி கோயில் திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும்; ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை : திண்டுக்கல் மாவட்டம், வெள்ளபொம்மன்பட்டி கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சாமிநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் விசாரித்தனர்.

விசாரனைக்கு பின் நீதிபதிகள் கூறியதாவது; கோயில் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து சமூகத்தவர்களும் வழிபாட்டில்  பங்கேற்க வேண்டும். மே 19ல் நடக்க விருக்கும் விழாவில் அனைத்து சமூகத்தினரும் வழிபட நடவடிக்கை எடுக்கவும், வேடசந்தூர் தாசில்தார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !