ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோவிலில் சங்காபிஷேகம், ஸ்கந்த மகா யாகம்
ADDED :517 days ago
உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக்கில் உள்ள கார்த்திக் சுவாமி கோவிலில் சங்காபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து பூர்ணணா ஹூதி நடந்தது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பழமையான கார்த்திக் சுவாமி எனும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. உத்தரகண்டில் உள்ள கார்த்திகேயனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில் இது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முருகன் தலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இக்கோயில் உள்ளது. இக்கோவிலில், நேற்று மே 15ம் தேதி காலை 9:00 முதல் பகல் 12:00 வரை ஸ்கந்த மகா யாகம், 108 வலம்புரி சங்குபூஜை, அறுபடைமுருகன் ஆலய வஸ்திர பரிமாற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.